சென்னை:இது குறித்து கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியத் தொழில்நுட்ப கழகம் (ஐ.ஐ.டி) சென்னை வளாகத்தில் மூன்று புள்ளிமான்கள் அடைப்பான் நோய் (Anthrax) தாக்கம் காரணமாக சந்தேகத்திற்கிடமான வகையில் இறந்துள்ளதாக கிண்டி தேசிய பூங்காவின் வனக்காப்பாளர் தெரிவித்திருந்தார். உடனே பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுமாறு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தால் அறிவுறுத்தப்பட்டது.
கிண்டி தேசிய பூங்காவின் கால்நடை மருத்துவருக்கு, இறந்து போன மான்களிலிருந்து மாதிரி பொருட்கள் சேகரித்து, அடைப்பான் நோய் உறுதிசெய்ய பரிசோதனைக்காக பல்கலைக்கழக மைய ஆய்வு கூடத்திற்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்காப்பு நடவடிக்கையாக இறந்துபோன மான்களின் பிரேதங்கள் பாதுகாப்பான முறையில் முறைப்படி அப்புறப்படுத்தப்படவேண்டுமென வன அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தடை