தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முதலமைச்சருடன் சீர்மரபினர் நல வாரிய தலைவர் சோ.அய்யர் சந்திப்பு - எடப்பாடி பழனிசாமி

சென்னை: தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியத் தலைவர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்தனர்.

meet
meet

By

Published : Jul 24, 2020, 11:58 AM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூலை 24) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியத்தின் தலைவர் டாக்டர் சோ.அய்யர், துணைத் தலைவர் முருகன்ஜி ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

அதனைத் தொடர்ந்து, முதலமைச்சரை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினர்களாக பொறுப்பேற்றுக் கொண்ட பிச்சாண்டி, ராமநாதன், சந்திரசேகரன், டாக்டர் அழகுமலை, டாக்டர் எம். சிவகுமார், அழகிரிசாமி ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

முதலமைச்சருடன் பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர்கள் சந்திப்பு

அப்போது, தலைமைச் செயலர் சண்முகம், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலர் சந்திர மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: முதலமைச்சரிடம் வாழ்த்துப்பெற்ற கே.பி.முனுசாமி

ABOUT THE AUTHOR

...view details