தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

லண்டன் கிங்ஸ் கல்லூரியில் ஏடிஜிபி மகளுக்கு சேர்க்கை மறுப்பு! - ADGP Mahesh Agarwal on t King s College London

புகழ்பெற்ற லண்டன் கிங்ஸ் கல்லூரியில் சென்னை குற்றப்பிரிவு ஏடிஜிபி மகேஷ் அகர்வாலின் மகளுக்கு சேர்க்கை மறுக்கப்பட்டுள்ளது. நிதி தொடர்பாக கேள்வி எழுப்பியதால் சேர்க்கை நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

denial-of-admission-to-adgp-daughter-at-kings-college-london
denial-of-admission-to-adgp-daughter-at-kings-college-london

By

Published : Jun 10, 2022, 10:17 PM IST

சென்னை: இதுகுறித்து மகேஷ் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில், லண்டன் கிங்ஸ் காலேஜ் பக்கத்தை டேக் செய்து, "இளம் அறிவியல் பொருளாதாரம் பாடப்பிரிவுக்கான சேர்க்கையில் முழு நிதி அளிப்பதாக உறுதியளித்தபின் எனது மகளின் சேர்க்கையை உறுதி செய்தீர்கள்.

இதையடுத்து எனது மகள் நிதி வழங்குவது தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியதால், ஒரு மாதத்தில் சேர்க்கையை ரத்து செய்து அதிர்ச்சியளித்துள்ளீர்கள். மாணவர்களின் நம்பிக்கையைத் தகர்த்துள்ளீர்கள்.

ஆகவே, புனிதம் மற்றும் புத்திசாலித்தனம் என்னும் உங்கள் கல்லூரியின் பொன்மொழிக்கேற்ப, எனது மகளின் இரண்டாவது முறையீட்டை ஏற்று, உங்கள் மதிப்புமிக்க நிறுவனத்தால் பின்பற்றப்படும் நிதிக்கொள்கையை மீட்டெடுக்க வேண்டுகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:வியட்நாம் விமானப்படை பயிற்சி பள்ளிக்கு இந்தியா நிதியுதவி

ABOUT THE AUTHOR

...view details