தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு பாதிப்பால் உடல்நலக்குறைவும் ஆங்காங்கே பச்சிளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை உயிரிழந்துவரும் நிலையில் டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்தவும் உயிரிழப்புகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர் ஏ.பி. சூரியபிரகாசம் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், சுகாதாரத் துறையிலுள்ள காலிப்பணியிடங்களை உரிய நேரத்தில் நிரப்பாததும் அதில் அரசு மெத்தனப்போக்கை காட்டுவதுதான் உயிரிழப்புக்குக் காரணமென மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார். சுகாதாரத் துறை சார்ந்த நிபுணர்கள் கொண்ட குழு ஒன்றை அமைக்க வேண்டுமெனவும் டெங்கு பாதிப்புகளை கட்டுப்படுத்த உத்தரவு பிறப்பித்து அவற்றை கண்காணிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளார்.