தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தனியார் பள்ளிகள் கோரிக்கை - Private Schools

1 முதல் 5ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கக்கோரி தனியார் பள்ளிகள் கோரிக்கைவிடுத்துள்ளன.

தனியார் பள்ளிகள் கோரிக்கை
தனியார் பள்ளிகள் கோரிக்கை

By

Published : Sep 29, 2021, 3:37 PM IST

Updated : Sep 29, 2021, 4:26 PM IST

நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து 8ஆம் வகுப்புவரை பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

கரோனா பரவல் காரணமாக மாணவர்களின் நலன்கருதி மூடப்பட்டிருந்த பள்ளிகள், தற்போது தொற்று குறையத் தொடங்கியவுடன் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தனியார் பள்ளிகளிலும் 1 முதல் 5ஆம் வகுப்புவரை திறக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது. சென்னையில் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் நந்தகுமார், "குழந்தைகள் மன உளைச்சலில் இருப்பதால் பள்ளிகள் திறப்பதுதான் சரியாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் 1 முதல் 5ஆம் வகுப்புவரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் செப்டம்பர் 21ஆம் தேதியிலிருந்து தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Sep 29, 2021, 4:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details