தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 21, 2022, 12:52 PM IST

ETV Bharat / city

பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் சுணக்கம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்
அமைச்சர்

சென்னை:நெடுஞ்சாலைகளில் சாலை விபத்துகளில் சிக்குபவர்களை தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கும் 'இன்னுயிர் காக்கும் திட்டம்'-ஐ கடந்த ஆண்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேல்மருவத்தூரில் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் விபத்துகளில் காயமடைந்தவர்களில் சிகிச்சை பெறும் 80 ஆயிரமாவது நபர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நேற்று (ஜூன்20) போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலம் விசாரித்தார். பின்னர் செதியாளர்களிடம் பேசிய அவர், 'இதுவரை இந்த திட்டத்தில் 80 ஆயிரமாவது நபர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இதுவரை இந்த திட்டத்தில் ரூ.72 கோடியே 64 ஆயிரத்து 39 ஆயிரம் மருத்துவ செலவு செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றின் வேகம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கட்டுப்பாடுகள் குறித்து, ஏதும் இதுவரை அறிவிக்கவில்லை. முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை என்பது 90 % ஆக உள்ளது.

பூஸ்டர் தடுப்பூசியை பொருத்தவரை தமிழகத்திலும், இந்தியாவிலும் சுணக்கம் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பணம் கொடுத்து தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டிய சூழலை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் தமிழகத்தில் தமிழக அரசு தனியார் மருத்துவமனைகள் உடன் இணைந்து இலவசமாக பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்தும் பணியை தொடங்க உள்ளோம்.

அடுத்த மாதம் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் தொடங்க உள்ளது. அதில் மக்கள் பயன்பெற வேண்டும் தமிழக அரசு பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக அளிக்கும் வரை காத்திருக்காமல், மக்கள் முன் வந்து பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும்' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சிறுவாணி அணை திறப்பு: பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details