நடிகர் அருள்நிதி இயக்குநர் பாண்டியராஜனின் 'வம்சம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்நிலையில் 'தேஜாவு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு சார்பில் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் தமன் ஆகியோர் வெளியிட்டனர்.
இதனையடுத்து பிறந்த நாள் கொண்டாடும் அருள்நிதிக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
த்ரில்லர் படம்
வைட் கார்பெட் ஃபிலிம்ஸ் சார்பாக விஜய் பாண்டி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் மிஸ்டரி த்ரில்லராக இப்படம் உருவாகி வருகிறது.
தேஜாவு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதில் மதுபாலா, அச்சுத குமார், ஸ்முருதி வெங்கட், மைம் கோபி, காளி வெங்கட், சேத்தன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகிவரும் இப்படத்தின் தெலுங்கு பதிப்பில் நவீன் சந்திரா கதாநாயகனாக நடித்து வருகிறார். படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
சில நாள்களுக்கு முன்பு அருள்நிதி நடித்த 'டைரி' படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'வம்சம் அருள் நிதி!'