சென்னை:திருப்பூர் மாவட்டம் தாரபுரத்தில் 2016ஆம் ஆண்டில் நடந்த கூட்டத்தில் பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து கருத்து தெரிவித்தார். இந்த கருத்துகள் ஜெயலலிதா மீது அவதூறாக பரப்பும் விதமாக உள்ளதாகவும், இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உடுமலை ராதாகிருஷ்ணன் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் இளங்கோவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று (ஏப். 8) நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.