தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட 4 பேருக்கு எதிரான அவதூறு வழக்குகள் ரத்து - Defamation case against Subramanian Swamy dismissed

சுப்பிரமணியன்சுவாமி உள்ளிட்ட 4 பேருக்கு எதிரான அவதூறு வழக்குகள் ரத்து
சுப்பிரமணியன்சுவாமி உள்ளிட்ட 4 பேருக்கு எதிரான அவதூறு வழக்குகள் ரத்து

By

Published : Dec 11, 2020, 4:04 PM IST

Updated : Dec 11, 2020, 6:11 PM IST

15:54 December 11

சென்னை: முதலமைச்சர் மற்றும் தமிழ்நாடு அரசை விமர்சித்ததாக சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த 9 அவதூறு வழக்குகளை ரத்துசெய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது அவரைப் பற்றியும், தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழ்நாடு அரசு குறித்தும் அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் அவர்களுக்கு எதிராக தமிழ்நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.

தங்களுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த இந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி, திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி, திமுக எம்.பிக்கள் கனிமொழி, எஸ்.ஆர். பார்த்திபன், அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திமுக எம்.எல்.ஏ மைதீன் கான், முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உள்ளிட்டோர் மீதும் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள் இன்று (டிச.11) நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, முதலமைச்சரை தனிப்பட்ட முறையில் விமர்சித்தவர்களுக்கு எதிராக, தமிழ்நாடு அரசு சார்பில் அவதூறு வழக்குகள் தொடர முடியாது எனவும், முதலமைச்சரின் துறை சார்ந்த நடவடிக்கைகளை விமர்சித்தால் மட்டுமே அரசு சார்பில் அவதூறு வழக்குத் தொடர முடியும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

அதன்படி, முதலமைச்சரை தனிப்பட்ட முறையில் மட்டுமே விமர்சித்ததாக சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிரான நான்கு அவதூறு வழக்குகள், செந்தில் பாலாஜிக்கு எதிரான இரண்டு வழக்குகள், செல்வகணபதிக்கு எதிரான இரண்டு வழக்குகள், மைதீன் கானுக்கு எதிரான ஒரு வழக்கையும் ரத்துசெய்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், கனிமொழி, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளை வெவ்வேறு தேதிகளுக்குத் தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: பாரதியாரின் சிலையை முறையாக பராமரிக்கக் கோரி டெல்லி துணை முதலமைச்சருக்கு ஜி.கே. வாசன் கடிதம்

Last Updated : Dec 11, 2020, 6:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details