தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அவதூறு வழக்கு: ஸ்டாலினுக்கு நீதிமன்றம் அழைப்பாணை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவதூறு வழக்கு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்குகளில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மே 6ஆம் தேதி ஆஜராக (முன்னிலையாக) சிறப்பு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

special court order
special court order

By

Published : Apr 16, 2021, 6:33 PM IST

Updated : Apr 16, 2021, 6:38 PM IST

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பற்றிய மக்களின் மனநிலை குறித்தும், வாக்கி-டாக்கி கொள்முதல் விவகாரத்தில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் குறித்தும் ஸ்டாலின் விமர்சனம் செய்து கருத்து தெரிவித்திருந்தார்.

அவரது கருத்து எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் ஆகியோரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, அவர்கள் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இரு அவதூறு வழக்குகளைத் தொடர்ந்தது.

இந்த இரு அவதூறு வழக்குகளும் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன.

இந்த வழக்குகள் இன்று (ஏப்ரல் 16) சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு வழக்குகளிலும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, மே 6ஆம் தேதி ஸ்டாலின் நேரில் முன்னிலையாக உத்தரவிட்டுள்ளார்.

Last Updated : Apr 16, 2021, 6:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details