தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னையில் ஆந்த்ராக்ஸ் நோயால் மான் உயிரிழப்பு... கிண்டி தேசியப் பூங்காவுக்கு எச்சரிக்கை... - சென்னை ஐஐடியில் ஆந்த்ராக்ஸ்

சென்னை ஐஐடி வளாகத்தில் ஆந்த்ராக்ஸ் நோயால் மான் உயிரிழந்ததால், கிண்டி தேசியப் பூங்காவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

deer-dies-of-anthrax-on-iit-madras-campus
deer-dies-of-anthrax-on-iit-madras-campus

By

Published : Mar 18, 2022, 9:41 AM IST

Updated : Mar 18, 2022, 9:51 AM IST

இதுகுறித்து சென்னை ஐஐடி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை ஐஐடி வளாகத்தில் ஆந்த்ராக்ஸ் நோயால் மான் ஒன்று உயிரிழந்துள்ளது. மேலும் இரண்டு மான்களுக்கு ஆந்த்ராக்ஸ் நோயின் அறிகுறிகள் உள்ளன. இந்த மான்களின் ரத்த, சளி மாதிரிகள் பரிசோதனைக்காக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதிருக்கிறோம். உயிரிழந்த மானின் உடல், உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி அடக்கம் செய்யப்பட்டுள்ளது. முதல்கட்ட தகவலில் நாய்கள் மூலம் ஆந்த்ராக்ஸ் நோய் பரவியிருப்பதாக தெரிகிறது. இதன்காரணமாக, ஐஐடி வளாகம் மற்றும் கிண்டி தேசியப் பூங்காவில் அதி தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக பூங்கா, ஐஐடி வளாகத்தில் விலங்குகளை யாரும் தொடக்கூடாது. உணவு வழங்கக் கூடாது அறிவுறுத்தப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக 4 மான்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

ஆந்த்ராக்ஸ் விலங்கில் இருந்து மனிதனுக்குப் பரவக்கூடும்

ஆந்த்ராக்ஸ் என்பது பாசிலஸ் ஆந்த்ராசிஸ் எனப்படும் கிராம்-பாசிட்டிவ் பாக்டீரியாவால் ஏற்படும் தீவிர தொற்று நோயாகும். இந்த நோய் பாலூட்டிகளிடையே தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. பாதிக்கப்பட்ட விலங்கிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது. இந்த நோய் தென் இந்தியாவில் காணப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் ஆந்திரப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், தமிழ்நாடு, ஒரிசா, கர்நாடகா மாநிலங்களில் காண்டறியப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சென்னை ஐஐடியில் நாய்கள் கடித்து மான் உயிரிழப்பு

Last Updated : Mar 18, 2022, 9:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details