தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

குறைந்துவரும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்! - Chennai Corporation

சென்னை: சென்னையில் கட்டுப்படுததப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 822 ஆக குறைந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

குறைந்துவரும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்
குறைந்துவரும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்

By

Published : Jun 16, 2021, 6:40 PM IST

Updated : Jun 16, 2021, 6:45 PM IST

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த கிருமி நாசினி தெளித்தல், மக்களுக்கு முகக் கவசம் வழங்குதல், மருத்துவ முகாம்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுவருகிறது.

முதல் அலையின்போது ஒருவருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டால், தெரு முழுவதும் அடைக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

இதன் காரணமாக, தற்போது ஒரு தெருவில் மூன்று முதல் ஐந்து வீடுகளில் தொற்று இருந்தால் மட்டுமே அதனை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி அறிவித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி சென்னையில் மொத்தம் 822 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக அறிவிக்கப்பபட்டுள்ளது.

குறைந்துவரும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்

அதில் 694 தெருக்களில் மூன்று நபர்களுக்கு மேற்பட்டோரும், 116 தெருக்களில் ஆறு நபர்களுக்கு மேற்பட்டோரும், 12 தெருக்களில் பத்திற்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Last Updated : Jun 16, 2021, 6:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details