சென்னை:Omicron:ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
பின்னர், தமிழ்நாட்டில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபரான நைஜீரியாவில் இருந்து வந்தவரும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த இருவரும் இன்று (டிச.23) குணமடைந்து வீடு திரும்பினர்.
அவர்களுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் பழக்கூடை வழங்கி நலம் விசாரித்தார்.
குணமடைந்து வீடு திரும்பிய நோயாளிகள்
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'தமிழ்நாட்டில் முதல் ஒமைக்ரான் தொற்றுக்குள்ளான நைஜீரியாவில் இருந்து வந்தவர், அவர் சகோதரி, சகோதரி மகள் ஆகியோர் தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று (டிச.23) குணமடைந்து வீடு திரும்பினர்.
மூன்று பேர் குணமடைந்ததில் மகிழ்ச்சி, அவர்களை நலம் விசாரித்தேன். லேசானப் பாதிப்பு இருப்பதாகக் கூறினர். இவர்கள் ஏழு நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர் குடும்பத்தைச் சேர்ந்த மீதமுள்ள ஐந்து நபர்கள் நாளை (டிச.23) குணமடைந்து வீடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஒமைக்ரானால் 34 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 31ஆக குறைந்தது. ஒன்றிய சுகாதாரத்துறை சார்பாக நாடுமுழுவதுமுள்ள மாநில சுகாதாரத்துறை அலுவலர்களுடன் இன்று (டிச.23) ஒமைக்ரான் பரவல் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை (டிச.24) ஆலோசனை மேற்கொள்ளப்படும்.
விழா கொண்டாட்டங்களில் தனிமனிதக் கட்டுப்பாடு அவசியம்