தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரேஷன் வாங்க நேரில் வரமுடியாதவர்களுக்கு மாற்றுவழி: அமைச்சர் அதிரடி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 13, 14ஆம் தேதியில் நடைபெற்ற நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில், திமுக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜுக்குப் பதிலளித்தார்.

கைரேகை வைத்து  நியாயவிலைக் கடைகளில் ரேசன் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம்
கைரேகை வைத்து நியாயவிலைக் கடைகளில் ரேசன் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம்

By

Published : Aug 16, 2021, 4:28 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 13ஆம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 14ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை நடைபெற்றது.

இந்நிலையில் சட்டப்பேரவையில் நடைபெற்ற நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று (ஆக. 16) சட்டப்பேரவையில் நடந்தது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற நிதிநிலை அறிக்கை மீதான விவாதம்

அமைச்சரும் முன்னாள் அமைச்சரும்:

இதில், தற்போதைய உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு அளித்த பதிலில்,

  • 'மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின்கீழ், வறுமை கோட்டுக்கு கீழ், வறுமை கோட்டுக்கு மேல் என மக்கள் பிரிக்கப்பட்டுள்ளனர்.
  • கைரேகை மூலம் ரேசன் பொருள்கள் வாங்குவது, 'ஒரே நாடு, ஒரே ரேசன்' என்னும் மத்திய அரசின் திட்டத்தின்கீழ் வருகிறது.
  • கடந்த ஆட்சிக் காலத்திலேயே நடைமுறைக்கு இத்திட்டம் வந்துவிட்டது. பல்வேறு மாவட்டங்களில் 96 விழுக்காட்டினர் இம்முறையைப் பின்பற்றி வருகிறார்கள்.
  • குடும்பத்தில் ஐந்து வயதுக்குமேல் இருப்பவர்கள், அவர்கள் கைரேகை வைத்து, நியாயவிலைக் கடைகளில் ரேசன் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம்.
  • நேரில் வரமுடியாத முதியவர்கள், நியாயவிலைக் கடை அலுவலர்களிடம் கடிதத்தைக் கொடுத்து ரேசன் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம்" என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவோம்: சட்டப்பேரவையில் முதலமைச்சர்'

ABOUT THE AUTHOR

...view details