தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விஷ்வ இந்து பரிஷத் அலுவலகத்திற்கு கொலை மிரட்டல் கடிதம் - சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்ங

விஷ்வ இந்து பரிஷத் அலுவலகத்திற்கு தபால் மூலம் வந்த கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விஷ்வ இந்து பரிஷத் அலுவலகத்திற்கு தபால் மூலம் வந்த கொலை மிரட்டல் கடிதம்
தமிழ்நாடு விஷ்வ இந்து பரிஷத் அலுவலகத்திற்கு தபால் மூலம் வந்த கொலை மிரட்டல் கடிதம்

By

Published : May 16, 2022, 6:39 AM IST

விஷ்வ இந்து பரிஷத்தின் சென்னை மாநகர அமைப்பாளர் சத்தியமூர்த்தி என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், "கடந்த 13.5.22 அன்று மாலை 3 மணி அளவில் தபால் மூலம் அனுப்புநர், விவரம் இல்லாமல் இரண்டு கடிதங்கள் எஸ். வேதாந்தம்ஜி மற்றும் ஆர்.ஆர்.கோபால்ஜி பெயரில் தங்கள் அலுவலகத்திற்கு கடிதம் வந்தது.

அந்த கடிதங்களைப் பிரித்துப் பார்த்தபோது கேரளாவை சேர்ந்த SDPI என்ற அமைப்பு சார்பாக தங்கள் அமைப்பின் நிறுவன தலைவர் வேதாந்தம்ஜி அமைப்பின் மாநிலத் தலைவர் மற்றும் தினமலர் பத்திரிக்கை வேலூர், திருச்சி பதிப்பாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி மற்றும் ராமேஸ்வரத்தை சேர்ந்த தங்கள் அமைப்பின் பொறுப்பாளர் சரவணன் ஆகிய மூவருக்கும் தங்கள் அமைப்பின் செயல்பாடுகளை நிறுத்தாத பட்சத்தில் கொலை செய்யப்படுவீர்கள் என கொலை மிரட்டல் விடுத்து எழுதப்பட்டிருந்தது.

கடித உறையை ஆராய்ந்து பார்த்ததில் அந்த கடிதம் விழுப்புரத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது. கொலை மிரட்டல் கடிதத்தை அனுப்பிய நபர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கரோனா காலத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் கைவிடப்படுவதாக டிஜிபி சைலேந்திரபாபு அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details