தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 5, 2022, 10:24 PM IST

ETV Bharat / city

ஜீவஜோதி வழக்கில் மூன்று மாதத்தில் குற்றப்பத்திரிகை வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்

ஜீவஜோதி மற்றும் அவரது கணவர் தண்டபாணி ஆகியோர் மீதான மோசடி வழக்கில் மூன்று மாத காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேதாரண்யம் காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Jeevajothi money swindling case
Jeevajothi money swindling case

கடந்த 2019ஆம் ஆண்டு தொழில் தொடங்குவதற்காக ஜீவ ஜோதியும் அவரது கணவர் தண்டாயுதபாணியும் தங்கள் வீட்டை அடமானமாக வைத்து பெற்ற 10 லட்சம் ரூபாய் கடனை திருப்பித் தராமல், உறவினர்கள் அடியாட்களுடன் வந்து தன்னை மிரட்டி அடமான பத்திரத்தை பிடுங்கிச் சென்று விட்டதாக நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தைச் சேர்ந்த வேதராசு என்பவர் வேதாரண்யம் காவல் நிலைத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேதாரண்யம் காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி வேதராசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், இந்த வழக்கில் 3 மாத காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என வேதாரண்யம் காவல்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணை தள்ளி வைத்துள்ளார்.

இதையும் படிங்க:கூலாக ஒரு வாக்: வேளாண் பண்ணையில் சுண்டல் சாப்பிட்ட மோடி

ABOUT THE AUTHOR

...view details