மதுரை: சென்னை சேர்ந்த கயல்விழி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனு தாக்கல்செய்திருந்தர். அந்த மனுவில், "தற்பொழுது ராமநாதபுரம் மாவட்ட கமுதி ஒன்றியம் சடையனேந்தல் ஊராட்சி மன்றத் தலைவியாக உள்ள மல்லிகா மலைச்சாமி மகள் நான்.
நான் கல்லூரியில் பி.இ. படித்துவந்தேன். அப்பொழுது நான் மாற்று சமூகத்தைச் சேர்ந்த (பட்டியலினத்தைச் சேர்ந்த) செல்வகுமார் என்பவரைக் காதலித்து திருமணம் செய்ய முடிவுசெய்தேன்.
ஆணவக்கொலை செய்வதற்காக முயற்சி
இது குறித்த தகவல் தெரிந்தவுடன் என்னுடைய உறவினர்கள் குறிப்பாக எனது அம்மா மல்லிகா மலைச்சாமி, தாய்மாமா தலைமையிலான உறவினர்கள் என்னை ஆணவக்கொலை செய்வதற்காக முயற்சி செய்தனர்.
இந்த நிலையில், நாங்கள் வீட்டைவிட்டு வெளியேறி காதல் திருமணம் செய்துகொண்டோம். இந்த நிலையில் அதிமுகவைச் சேர்ந்தவர் எனது அம்மா, முனியசாமி அவருடைய கட்சி அதிகார பலத்தைக் கொண்டு எங்களை மிரட்டிவருகிறார். இந்திய தேர்தல் ஆணையம் மக்கள் பிரதிநிதி சாதி, மத ரீதியான பாகுபாடு பார்க்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டதால் என் மீது பாகுபாடு கொண்டு என்னைப் பலவகைகளில் தொந்தரவு செய்துவருகின்றனர். தேர்தல் ஆணைய விதிமுறையைப் பின்பற்றாத எனது அம்மா வேட்புமனு தாக்கலின்போது தவறான தகவலையும், வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துகளையும் சேர்த்துள்ளார்.