தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஜன.23இல் முதுநிலை மருத்துவப்படிப்பு கலந்தாய்வு!

முதுநிலை மருத்துவப்படிப்பிற்கான கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதையடுத்து அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜன.12 முதல் 23 வரை நடைபெறுகிறது.

முதுநிலை
முதுநிலை

By

Published : Jan 18, 2022, 5:26 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் ஜன.24ஆம் தேதி முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களுக்கான கலந்தாய்வு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள முதுகலை மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்விற்கு உரியத் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, வரும் 24ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு நடத்தத் தேவையான நடவடிக்கைகளை மருத்துவக் கல்வி இயக்குநரகம் மேற்கொண்டு வருகிறது.

கலந்தாய்வு நடத்த அனுமதி

முதுநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேர்க்கையில் பொருளாதாரத்தில் முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.

நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு வந்த இந்த வழக்கு விசாரணையில் ஜனவரி முதல் வாரத்தில் உச்சநீதிமன்றம் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதம் இடங்களுக்குக் கலந்தாய்வு நடத்தலாம் எனத் தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜனவரி 12ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையில் நடைபெற்று வருகிறது.

ஜன.24ல் ஆன்லைனில் கலந்தாய்வு

தமிழ்நாட்டில் 2,541 முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் அரசு மருத்துவர்களுக்கான முதுகலை படிப்பில் முன்னுரிமைக்கான இட ஒதுக்கீட்டுத் தீர்ப்பு வந்த உடன் வெளியிடப்பட உள்ளது.

அதனைத் தொடர்ந்து, 24ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்துவதற்கு மருத்துவக்கல்வி இயக்குநரகம் திட்டமிட்டுள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்பில் மாநிலத்தில் உள்ள மொத்த இடங்களில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியல் இன பெண்களுக்கு ஒதுக்கீடு

ABOUT THE AUTHOR

...view details