தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு.. - தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைக்கானத் தேர்வு

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்திற்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தேர்வு
தேர்வு

By

Published : Jan 12, 2022, 7:59 AM IST

சென்னை:தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்திற்கான தேர்வு மார்ச் 5ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தேர்வுக்கான விண்ணப்பங்களை இன்று முதல் வரும் 27ஆம் தேதி வரை www.dge.tn.gov.inஎன்கிற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

கால அவகாசம் கிடையாது

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணம் 50 ரூபாயை பள்ளி தலைமை ஆசிரியரிடம் மாணவர்கள் ஜனவரி 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க, இந்த தேதிக்கு மேல் கால அவகாசம் வழங்கப்படாது எனவும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

அரசு தேர்வுகள் இயக்ககம்

இத்திட்டத்திற்கான கூடுதல் விவரங்களை மாணவர்கள் இணையதளம் மூலமாக அறியலாம் என அரசு தேர்வுகள் துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பழனி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா: பக்தர்களுக்கு அனுமதி இல்லை

ABOUT THE AUTHOR

...view details