நடன இயக்குநர் சங்கத் தேர்தலில் தினேஷ் மாஸ்டர் அணி வெற்றி - Dancer Association
சென்னை: நடன இயக்குநர் மற்றும் நடனக் கலைஞர்கள் சங்க தேர்தலில் தினேஷ் மாஸ்டர் தலைமையிலான அணி வெற்றி பெற்றுள்ளது
தினேஷ் மாஸ்டர் அணி வெற்றி
நடன இயக்குநர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் சங்கத்திற்கான தேர்தல் சென்னை தியாகராய நகரில் நேற்று நடைபெற்றது. இத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 8 மணிக்கு முதல் மாலை 5:30 மணி வரை நடைபெற்றது. தபால் மூலம் 70 வாக்குகளும், நேரடியாக 503 வாக்குகளும் பதிவாகியிருந்தன. மொத்தம் பதிவான 573 வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரி அலுவலர்கள் தற்போது முடிவுகளை அறிவித்துள்ளனர்.
தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட தினேஷ் மாஸ்டர், 322 வாக்குகளைப் பெற்று 75 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடனக் கலைஞர் சங்கத்தில் துணைத் தலைவர் உட்பட மற்ற ஏழு முக்கிய பொறுப்புகள் தினேஷ் மாஸ்டர் தலைமையிலான அணிக்கே சென்றுள்ளன.