புதுச்சேரி: காலாப்பட்டு பகுதியில் 290 சிறைக் கைதிகளுடன் மத்திய சிறைச்சாலை இயங்கி வருகிறது. இதில் 2 பெண் கைதிகளும் அடங்குவர். குறிப்பாக தண்டனை மற்றும் விசாரணை கைதிகளுக்கு அவர்களது மன அழுத்தம் குறையும் வகையில் மத்திய சிறைச்சாலை நிர்வாகம் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.
அதாவது அவர்களுக்கு டான்ஸ் தெரபி என்ற புதிய பயிற்சியை தனியார் உதவியுடன் செய்து வருகிறது. ஆரம்பகட்டத்தில் 5 கைதிகள் மட்டுமே இதில் ஆர்வம் காட்டினர். ஆனால், கடந்த செப்டம்பர் மாதம் முதல் இந்த பயிற்சிகள் 25க்கும் மேற்பட்ட கைதிகள் நடன பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தப் பயிற்சியை கைதிகளுக்கு புதுச்சேரி கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியை கிருத்திகா ரவிச்சந்திரன் இலவசமாக மேற்கொண்டு வருகிறார். இதனால், மன அழுத்தம் வெகுவாக குறைந்து மகிழ்ச்சி தருவதாக கைதிகள் தெரிவித்துள்ளனர்.