தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அணை பாதுகாப்பை உறுதிசெய்ய நிபுணர் குழு அமைப்பு - அரசு - dam safety team

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அணைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய எட்டு பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

tn government
tn government

By

Published : Jan 31, 2020, 3:21 PM IST

தமிழ்நாடு முழுவதும் உள்ள அணைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய எட்டு பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 120 அணைகளின் தரத்தை உறுதிசெய்து அணைகளின் மதகுகள், கரைகளை ஆய்வுசெய்து அணைகளை மேம்படுத்த தமிழ்நாடு அரசு ஏற்கனவே ஆறு பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தது.

இந்தக்குழு வடகிழக்கு, தென்மேற்குப் பருவமழை காலங்களில் அணைகளை ஆய்வுசெய்து அரசுக்கு அறிக்கை அளித்துவருகிறது. ஆனால் அணைகளின் எண்ணிக்கை அதிகமுள்ள நிலையில் ஆறு பேர் கொண்ட குழுவால் அணைகளின் பாதுகாப்பை நேரில் ஆய்வுசெய்து அரசுக்கு அறிக்கை வழங்க சிரமம் ஏற்பட்டுள்ளதால் கூடுதலாக எட்டு பேர் கொண்ட குழுவை அரசு அமைத்துள்ளது.

வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி உறுப்பினர் நரேஷ்குமார் மாத்தூர் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் மத்திய நீர்வள ஆணைய இயக்குநர் விவேல் திரிபாதி, பொதுப்பணித் துறையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் உள்ளிட்ட எட்டு பேர் கொண்ட குழுவை அமைத்து பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு அணையில் மத்திய மூவர் குழுவினர் ஆய்வு

ABOUT THE AUTHOR

...view details