இது தொடர்பாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கச்சிகூடாவிலிருந்து மங்களூரூ சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஜனவரி 29 முதல், வாரம் இருமுறை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செல்லும் அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தமிழ்நாட்டின் காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக மங்களுர் சென்றடைகிறது. மறு மார்க்கத்தில் மங்களுரிலிருந்து புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இந்த சிறப்பு ரயிலானது இயங்கும்.
மதுரை, திருப்பதி, ஜோலார்பேட்டைக்கு நாள்தோறும் சிறப்பு ரயில்கள்! - திருப்பதி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருப்பதி, ஜோலார்பேட்டைக்கும், விழுப்புரத்திலிருந்து மதுரைக்கும் நாள்தோறும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
trains
இதேபோல, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருப்பதிக்கும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஜோலார்பேட்டைக்கும், விழுப்புரத்திலிருந்து மதுரைக்கும் நாள் தோறும் சிறப்பு ரயில்கள் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதியிலிருந்து இயக்கப்படவுள்ளன. இச்சிறப்பு ரயில்கள் அனைத்தும் மறு மார்க்கத்திலிருந்து அதே வழித்தடத்தில் இயக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாநகரப் பேருந்திலிருந்து தவறிவிழுந்து முதியவர் உயிரிழப்பு!