தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 20, 2021, 3:21 PM IST

ETV Bharat / city

ஒமைக்ரான் அச்சுறுத்தல்: பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்

ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு மீண்டும் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

சென்னை:கரோனா தொற்றின் இரண்டாம் அலை குறைந்துவரும் நிலையில், உலகம் முழுவதும் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பி வந்தது. இதனிடையே கரோனா உருமாற்றம் அடைந்து டெல்டா, டெல்டா பிளஸ் என்று மக்களிடையே பீதியை கிளப்பியது. இந்த நிலையில், ஒமைக்ரான் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

ஒமைக்ரான் வெறும் 2 வாரத்தில் 91 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 150ஐ நெருங்கிவருகிறது. குறிப்பாக மாகாராஷ்டிரா, தெலங்கானாவில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை ஒன்பது பேருக்கு ஒமைக்ரான் இருக்கலாம் என முதற்கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது. ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பேரலை வரும் ஜனவரியில் தொடங்கும் என்று சுகாதாரத்துறை அலுவர்கள் தெரிவித்துவருகின்றனர். இதன் காரணமாக மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதோபோல தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு வரும் ஜனவரி முதல் விடுமுறை அளிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகிவருகின்றன. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விரைவில் அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளது.

ஒரு நாளைக்கு 10,000ஆம் பேருக்கு ஒமைக்ரான்

பிரிட்டனில் ஒரு நாளைக்கு 10,000ஆம் பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகிவருகிறது. இதனால் அந்நாட்டில் பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு கரோனா இரண்டாம் அலை பிரிட்டனில் தொடங்கிய, இரண்டு மாதங்களில் இந்தியாவில் தொடங்கியது. தற்போது ஒமைக்ரான் பேரலை பிரிட்டனில் தொடங்கி விட்டது. அதன்படி இந்தியாவில் வரும் மாதங்களில் ஒமைக்ரான் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க:ஒமைக்ரான் அச்சுறுத்தல்: மீண்டும் லாக்டவுண்!

ABOUT THE AUTHOR

...view details