நடிகர் ரஜினிகாந்த்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இந்த விருதை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார்
விழாவில் பேசிய ரஜினிகாந்த், “என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி” என்று கூறினார். மேலும், “தாதா சாகேப் விருதை மறைந்த இயக்குநர் கே. பாலசந்தருக்கு சமர்பிக்கிறேன்” என்றும் கூறினார்.
இந்நிலையில், திரைபிரபலங்கள், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள், ரசிகர்கள் பலர் சமூகவலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
அந்த வகையில், தேமுதிக கட்சியின் பொதுச்செயலாரும், நடிகருமான விஜயகாந்த் தனது ட்விட்டரில், " இந்திய திரையுலகினருக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் மிக உயரிய விருதான, தாதா சாகேப் பால்கே விருது பெற்ற அண்ணன் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'விருதை எதிர்பார்க்கவில்லை, கே.பி. சார் இல்லாதது வருத்தம்'- தாதா சாகேப் ரஜினிகாந்த்!