தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சைக்கிளில் சென்ற ஜோதிமணி: பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு - கரூரில் சைக்கிள் பேரணி

பெட்ரோல், டீசல் விலையேற்றத்திற்கு எதிராக கரூரில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தலைமையில் இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.

சைக்கிளில் சென்ற ஜோதிமணி
சைக்கிளில் சென்ற ஜோதிமணி

By

Published : Jul 12, 2021, 10:56 PM IST

கரூர்: அண்மைக் காலமாகவே பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. பல மாநிலங்களில், மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் இன்று கரூரில் பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தலைமையில் கரூர் பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி ரவுண்டானா, கடைவீதி வழியாகச் சென்று மீண்டும் பேருந்து நிலையப் பகுதியில் நிறைவடைந்தது.

எம்பி ஜோதிமணி சைக்கிள் ஓட்டிக்கொண்டு பெட்ரோல், டீசல் விலைக்கு எதிராகத் துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார். மேலும் மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்.

ABOUT THE AUTHOR

...view details