தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 12, 2022, 10:36 AM IST

ETV Bharat / city

சி.வி. சண்முகத்திற்கு கொலைமிரட்டல் - நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை ஆணையரிடம் புகார்

அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகத்திற்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவரது வழக்கறிஞர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை:அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகத்திற்கு வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள் மூலமாகவும், வீடியோ பதிவு மூலமாகவும் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவரது வழக்கறிஞர் சார்பில் நேற்று (அக்.11) புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரான சி.வி.சண்முகத்தின் வழக்கறிஞரான பாலமுருகன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் சங்கராபுரம் பகுதியைச்சேர்ந்த திமுக பிரமுகரான சக்திவேல் என்பவர் சி.வி.சண்முகத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் வீடியோ ஒன்றை வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, பரப்பி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோ பதிவில் சக்திவேல் சி.வி.சண்முகத்தை தரக்குறைவாகப் பேசி, கொலை செய்துவிடுவதாக மிரட்டி பேசியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அந்த வீடியோவால் இரு தரப்பினரிடையே கலகம் மூண்டு சட்டம் ஒழுங்கு சீர்குலையும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாகப் புகாரில் தெரிவித்துள்ள வழக்கறிஞர் பாலமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகத்தின் உயிருக்கு ஆபத்திருப்பதாகவும், பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஏற்கெனவே பல்வேறு செல்போன் எண்களில் இருந்து ரவுடி மற்றும் குண்டர்களால் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் செல்போன் எண்ணிற்கு ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் பேசி, கொலை மிரட்டல் விடுத்து குறுஞ்செய்திகள் அனுப்பி வந்தது தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் ரோஷனை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

முன்னதாக, கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதி 'நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகத்தின் தலையைத் தோரணம் கட்டி தொங்க விடுவோம்' என மிரட்டல் வந்த குறுஞ்செய்தி தொடர்பாக பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதாக அவர் புகாரில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொலை மிரட்டல் வீடியோ வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் ஆணையரிடம் புகார்

மேலும், முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருகான சி.வி.சண்முகம் குறித்து அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்ட சக்திவேல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: எதிர்கட்சி துணைத்தலைவர் யார்?... இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்ஸின் தொடர் கடிதத்தால் சபாநாயகர் குழப்பம்

ABOUT THE AUTHOR

...view details