தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாற்றமில்லை - ஊரடங்கு தொடரும்..! - கொரோனா

கரோனா மூன்றாவது அலை தொடங்கியதாகக் கூறப்படும் இவ்வேளையில், ஊரடங்கு தொடரும் என்ற அறிவிப்பை தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஊரடங்கு தொடரும்
ஊரடங்கு தொடரும்

By

Published : Jul 16, 2021, 8:20 PM IST

Updated : Jul 19, 2021, 10:04 AM IST

கரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் குறைக்கத் தேவையான கட்டுப்பாடுகளை ஜூலை 31ஆம் தேதிவரை தொடர்ந்து நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசின் உள் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 2020 மார்ச் 2 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ்கரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறையில் இருந்துவருகிறது.

தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு ஜூலை 19 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தின் கரோனா நோய்த் தொற்று நிலையைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு தொடரும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

Last Updated : Jul 19, 2021, 10:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details