சென்னை சேப்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், "கள் மீதான தடை என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு அரசு இழைத்து வரும் அநீதியாகும். கள் இறக்குவதும் பருகுவதும் அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை. இதற்கு தமிழ்நாட்டில் மட்டும் 33 ஆண்டுகளாக தடை போட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
இத்தடையை நீக்கக்கோரி வரும் 23ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம் பொன்னம்பலத்தில் கள் இறக்கும் அறப்போராட்டம் நடைபெறும். கள் குடித்து போதை ஏறுகிறது என்பதை நிரூபித்தால், 10 கோடி ரூபாய் கொடுப்பதாக அறிவித்தும், யாரும் நிரூபிக்க முடியவில்லை. மேலும், மார்ச் 13 ஆம் தேதி கள் ஆதரவு மாநாடு ஈரோட்டில் நடைபெறும். இந்த மாநாடு அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும்.