சென்னை:திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பாெறுப்புகளில் இருந்தும் கடலூர் கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் அய்யப்பன் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று (மார்ச் 6) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கடலூர் கிழக்கு மாவட்டம், கடலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கோ. அய்யப்பன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்' எனத் தெரிவித்துள்ளார்.
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பு திமுகவில் தொடரும் நீக்கம்:
அதேபோல் கோயம்புத்தூர் மாவட்டத்திலும் திமுக நிர்வாகி ஒருவர் நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக மாநில மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மறைமுக தேர்தலில் நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்: தொல்.திருமாவளவன்