தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தேசியக் கொடியை காப்பாற்றிய காவலருக்கு பாராட்டு...! - Cuddalore Cop Reward For Saves National flag

சென்னை: போராட்டத்தின்போது கீழே விழுந்த தேசியக் கொடியை தூக்கி நிறுத்திய காவலருக்கு, காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

Cuddalore Police Saves National flag கடலூர் காவலர் தேசிய கொடியை காப்பாற்றும் வீடியோ காவலர் தேசிய கொடியை காப்பாற்றும் வீடியோ Police Saves National flag Cuddalore Cop Reward For Saves National flag Cop Reward For Saves National flag
Police Saves National flag

By

Published : Jan 11, 2020, 9:21 AM IST

கடலூர் மாவட்டம் வால்பேட்டை அருகே டிசம்பர் மாதம் 20ஆம் தேதி இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டிருந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினருக்கும் பாதுகாப்பு பணியில் இருந்த காவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பரஸ்பரம் தாக்கி கொண்டனர்.

அப்போது போராட்டக்காரர்கள் சிலர், தங்களது கையில் ஏந்தியுருந்த தேசியக் கொடியை கீழே போட்டுவிட்டு ஓடினர். இதையறிந்த தமிழ்நாடு சிறப்பு காவல்படையைச் சேர்ந்த காவலர் கார்த்திகேயன், கீழே விழுந்த கொடியை எடுத்து நிறுத்தினார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.

இந்த வீடியோவை மாநகர காவல் ஆணையர் பார்த்து கார்த்திகேயனை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கார்த்திகேயன் கூறுகையில், இந்த சம்பவம் தனது வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் எனவும் இந்த பாராட்டு என்னையும், என்னை போன்றவர்களையும் மேலும் ஊக்கப்படுத்தும் என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

தேசிய கொடியை தூக்கி நிறுத்தும் காவலர்

இதேபோல், கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிநவ் நேரில் அழைத்து வெகுமதி அளித்து பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார்.

இதையும் படிங்க:

பேச செல்போன் தர மறுப்பு: அதிகாலையில் நிகழ்ந்த ஆயுத தாக்குதல்!

ABOUT THE AUTHOR

...view details