தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் கரோனா பிந்தைய நல்வாழ்வு மையத்தில் சிடி ஸ்கேன் வசதி - omandurar medical college

சென்னை: அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பிந்தைய நல்வாழ்வு மையத்தில் பிரத்யேகமாக 2 சிடி ஸ்கேன் பொருத்தப்பட்டுள்ளது.

Chennai
Chennai

By

Published : Nov 8, 2020, 7:14 PM IST

1895ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி ராண்ட்ஜன் எனும் எக்ஸ்ரே கதிர்வீச்சு கருவியை ராண்ட்ஜன் என்ற இயற்பியல் அறிஞர் கண்டுபிடித்தார். இந்த நாளை உலகம் முழுவதும் கதிரியக்கவியல் தினமாக அனுசரிக்கப்படுகிறது. மேலும் எக்ஸ்ரே கதிர்வீச்சு கண்டறியப்பட்ட 125 ஆண்டாகவும் உள்ளது.

கரோனா நோயால் ஏற்பட்ட நுரையீரல் பாதிப்பை கண்டறிவதற்கு எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் பரிசோதனை மிகவும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கரோனா நோயாளிகளின் நுரையீரல் தொற்றை கண்டறிய கதிரியக்கவியல் துறை மருத்துவர்களும், கதிரியக்க நுட்புநர்களும் அயராது பணியாற்றி வருகின்றனர்.

சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவிட்-19 சிகிச்சைக்கு பிரத்யேகமான சிறப்பு மையம் செயல்பட்டு வருகின்றது. இந்த மருத்துவமனையில் இதுவரையில் 23,037 உள்நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 21,329 பேர் குணமடைந்து டிஜ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். புறநோயாளிகளாக 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். அதாவது 92.6 விழுக்காடு பேர் குணமடைந்துள்ளனர்.

இந்த மருத்துவமனையில் இதுவரையில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனைகளும், 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எக்ஸ்ரே பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளன. கரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு பாதிப்பை கண்டறிவது மட்டுமல்லாமல், கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கும், கரோனாவிற்கு பிந்தைய நல்வாழ்வு மையத்தில் சிடி ஸ்கேன் பரிசோதனைகள் செய்ய இரண்டு அதிநவீன சிடி ஸ்கேன் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலமாக கரோனா நோய் நுரையீரல் பாதிப்பில் இருந்து 98 விழுக்காடு நோயாளிகள் மீண்டுள்ளனர்.

உலக கதிரியக்கவியல் தினத்தில் கதிரியக்கவியல் துறையில் பணியாற்றிய மருத்துவர்கள், தொழில்நுட்ப பணியாளர்களை கல்லூரி முதல்வர் ஜெயந்தி பாராட்டினார்.

ABOUT THE AUTHOR

...view details