ஆவடியை அடுத்த மிட்டனமல்லி, வள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் வர்கீஸ் (53). இவர், ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படையில் தலைமைக் காவலராகப் பணியாற்றிவந்தார். இவரது மனைவி ஜெர்ஸம்மாள் (51), மகன் அமிர்தஜன் (24) ஆகியோர் ஆவர்.
இவர் நேற்று முன்தினம் (பிப். 17) மதியம் தனது மனைவி, மகனுடன் வீட்டில் சாம்பார் சாதத்துடன், பீன்ஸ், கேரட் பொறியல் சாப்பிட்டுள்ளார். பின்னர், மாலை மூவரும் வாந்தியெடுத்து மயங்கி விழுந்துள்ளனர்.
இதனைப் பார்த்த, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டுசேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி வர்கீஸ் நள்ளிரவில் இறந்தார்.
மேலும், ஜெர்ஸம்மாள், அமிர்தஜன் ஆகியோருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர். புகாரின் அடிப்படையில் முத்தாபுதுப்பேட்டை காவல் ஆய்வாளர் ஜெய்சங்கர் தலைமையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மத்திய ரிசர்வ் காவல் படையில் தலைமைக் காவலராகப் பணியாற்றிய வர்கீஸ் மேலும், உணவில் நச்சுத்தன்மை ஏற்பட்டு வாந்தி எடுத்து வர்கீஸ் இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், காவல் துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா எழுதிய கடிதம், ரஜினியை எப்படிக் கட்டுப்படுத்தும்: நீதிமன்றம் கேள்வி?