தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரைக்குத் திரும்பாத படகுகள் - குறைந்த அளவிலேயே மீன் வாங்க குவிந்த மக்கள் - காசிமேடு மீன் மார்க்கெட் நிலவரம் இதுதான்! - காசிமேட்டில் குறைந்த அளவில் மீன் வாங்க குவிந்த மக்கள்

தமிழ்நாட்டில் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதால் காசிமேட்டில் குறைந்த அளவிலேயே மக்கள் மீன் வாங்க குவிந்தனர்.

ஊரடங்கு ரத்து காசிமேட்டில் குறைந்த அளவிலேயே மீன் வாங்க குவிந்த மக்கள்
ஊரடங்கு ரத்து காசிமேட்டில் குறைந்த அளவிலேயே மீன் வாங்க குவிந்த மக்கள்

By

Published : Jan 30, 2022, 9:18 PM IST

தமிழ்நாடு முழுவதும் கரோனா பரவலுக்காக போடப்பட்டிருந்த ஊரடங்கு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஊரடங்கு நீக்கப்பட்டு, முதல் ஞாயிற்றுக் கிழமையான இன்று(ஜனவரி.30) காசிமேட்டில் குறைந்த அளவிலான மக்களே மீன்கள் வாங்க குவிந்தனர்.

படகுகளும் அதிக அளவிற்கு வராததால் மீன்களின் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது. பொதுமக்கள் கூட்டம் இல்லாததால் வியாபாரிகள் ஏக்கத்துடன் வியாபாரத்திற்காக அமர்ந்திருந்தனர். இதில் சிறிய ரக மீன்களை விட பெரிய ரக மீன்கள் அதிகமாக காணப்பட்டன.

இதில் காலா வகை மீன்கள் கிலோ ரூ.650-க்கும், சங்கரா மீன் கிலோ ரூ.450க்கும், நெத்திலி கிலோ ரூ.320-க்கும், கடம்மா வகை மீன் ரூ.350 க்கும், நண்டு கிலோ ரூ.450-க்கும், வஞ்சரம் மீன் கிலோ ரூ.800-க்கும், கொடுவா மீன் ரூ.600-க்கும், கிழங்கான் மீன் ரூ.450-க்கும், இறால் ரூ.350 -க்கும், டைகர் இறால் ரூ.900-க்கும், பாறை வகை மீன்கள் ரூ. 350-க்கும், புள்ளிகள் வகை மீன்கள் ரூ.310-க்கும் விற்பனையானது.

மீன்கள் வாங்க சென்னை - தியாகராய நகர்ப் பகுதியிலிருந்து குடும்பத்துடன் வந்திருந்த நவீன் ஈடிவி பாரத் தமிழுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் கூறியதாவது, 'ஊரடங்கு முடிந்து முதல் வாரம் என்பதால், இங்கு மீன்கள் வாங்க குடும்பத்துடன் வந்தோம்.

மீன்களின் விலை அதிகமாக உள்ளது. மேலும் கூட்டமும் ஓரளவிற்கு உள்ளது. நாங்கள் தற்போது ரூ.1500-க்கு மீன் வாங்கி சென்றுள்ளோம். மீன்களின் விலை ஓரளவிற்கு திருப்திகரமாக உள்ளது' எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து புளியந்தோப்பிலிருந்து தனது நண்பர்களுடன் வந்திருந்த சதீஷ் என்பவர் ஈடிவி பாரத் தமிழுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் கூறியதாவது, 'நாங்கள் புளியந்தோப்புப்பகுதியில் இருந்து மீன் வாங்க காசிமேடு பகுதிக்கு வந்துள்ளோம். ஊரடங்கு இருந்ததால் எங்களால் காசிமேட்டிற்கு வர முடியவில்லை.

ஊரடங்கு ரத்து காசிமேட்டில் குறைந்த அளவிலேயே மீன் வாங்க குவிந்த மக்கள்

இன்று ஊரடங்கு ரத்து செய்யப்பட்டிருந்ததால் நண்பர்களுடன் மீன் வாங்க வந்தோம். அனைத்து வகை மீன்களும் இன்று உள்ளன. மீன்களின் விலை சற்று கணிசமாக உயர்ந்து உள்ளது. அடுத்த வாரத்திலிருந்து இங்கு மீன் வாங்க கூட்டம் அதிகமாக இருக்கும் என கருதுகிறோம்’ என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் இருவர் உயிரிழப்பு - ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details