தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை வேகமெடுத்துள்ள நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் மே 24ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவையின்றி சுற்றித் திரியும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான உணவங்கள் இன்று அடைக்கப்பட்டுள்ளதால் அம்மா உணவகங்களில் மக்கள் உணவு வாங்கிச் சென்றனர்.