கடந்த 2ஆம் தேதி தினமலர் நாளிதழில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை ஏலம்விடும் வகையில் கார்ட்டூன் வெளியிடப்பட்டது.
விஜயகாந்த், பிரேமலதாவை விமர்சித்து சித்திரம்: தினமலர் ஆசிரியர், கார்ட்டூனிஸ்ட் நேரில் ஆஜராக அழைப்பாணை - தினமலர் ஆசிரியர்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா ஆகியோரை விமர்சித்து கேலி சித்திரம் வெளியிட்டது தொடர்பாக தினமலர் ஆசிரியர், கார்ட்டூனிஸ்ட் நேரில் முன்னிலையாக சைதாப்பேட்டை நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

தேமுதிக
இந்தக் கார்ட்டூன் தேமுதிக தலைவர் விஜயகாந்த், கட்சியின் பொருளாளர் பிரேமலதா ஆகியோரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி தேமுதிக மாவட்டச் செயலாளர் விசாகன் ராஜா சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தாக்கல்செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை 17ஆவது நீதிமன்றம் வழக்கு தொடர்பாக, தினமலர் நாளிதழ் ஆசிரியர் ராம சுப்பு, கார்ட்டூனிஸ்ட் கர்ணா ஆகியோர் நவம்பர் 10ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாக உத்தரவிட்டுள்ளது.