தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திமுக ஓராண்டு ஆட்சி நிறைவு: மக்கள் சந்தோஷமாக இல்லை - சொல்கிறார் சசிகலா - வி.கே.சசிகலா

தமிழ்நாட்டில் நிறைய இடங்களுக்கு சென்று வந்ததில் மக்கள் சந்தோஷமாக இல்லை என்றும் அதுதான் யதார்த்தம் என்றும் திமுகவின் ஓராண்டு ஆட்சி நிறைவு பெற்றது குறித்து சசிகலா விமர்சித்துள்ளார்.

சசிகலா
சசிகலா

By

Published : May 8, 2022, 7:56 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் மாவட்டந்தோறும் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் சசிகலா, அந்தந்த மாவட்டங்களில் உள்ள மூத்த நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில், நேற்று (மே 7) காலை, திருச்செந்தூரில் இருந்து, சாலை மார்க்கமாக அதிமுக கொடி கட்டிய காரில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்த சசிகலா, சாமி தரிசனம் செய்தார். பின்னர், சசிகலா அங்கிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திமுக ஆட்சிக்கு வந்து ஒராண்டு நிறைவு பெற்றதை, திமுகவினர் பிரம்மாண்டமாக பேசுகின்றனர். ஆனால், மக்களிடத்தில் அப்படி ஒன்றும் இல்லை. நிறைய இடங்களுக்கு சென்று வந்ததில் மக்கள் சந்தோஷமாக இல்லை, அதுதான் யதார்த்தம். செய்திகளில், தொலைக்காட்சிகளில் சொல்வது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. அது மட்டுமே போதும் என்று நினைத்துவிட்டார்கள் என தெரிகிறது.

சசிகலா பேட்டி

மக்களுக்கு தேவையானதை செய்ய வேண்டும். மக்கள் எதுவும் கேட்கவில்லை. ஆனால், திமுக தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய், நீட் விலக்கு ஆகியவற்றை அறிவித்தனர். ஆனால், ஒரு வருடம் முடிந்தும் எதுவும் செய்யவில்லை. அரசு மக்களுக்கு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்து உள்ளது. கரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நேரத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலை உயர்வு ஏற்றுக்கொள்ள முடியாது. அதிமுகவுடன் இணைவது குறித்து பொறுத்திருந்து பாருங்கள்' என்று கூறினார்.

இதையும் படிங்க: திருச்சியில் 'மியாவாக்கி காடு' உருவாக்கும் முயற்சியில் மேயர்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details