சென்னை: கடந்த 2012, 2013ஆம் ஆண்டுகளில் மகாபலிபுரத்தில் வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடுகள் நடைபெற்றன.அப்போது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இரவு 10 மணிக்கு மேல் கூட்டம் நடத்தியதாக பாமக நிறுவனர் ராமதாஸ், அப்போதைய பாமக இளைஞரணி தலைவரும், தற்போதைய தலைவருமான அன்புமணி ராமதாஸ், அப்போதைய தலைவர் ஜிகே மணி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏகே மூர்த்தி, திருக்கச்சூர் ஆறுமுகம் ஆகியோர் மீது மகாபலிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணையில் இருந்தது.