தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு சிறப்பு அலுவலர்கள் பணியிடங்கள் உருவாக்கம் - வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ( CMDA ) போன்று கோவை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட மாநகராட்சிகளில் பெருநகர வளர்ச்சி குழுமங்கள் அமைத்து, ஐஏஎஸ் தரத்திலான சிறப்பு அலுவலர்களை கொண்ட பணியிடங்களை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Metropolitan Development Corporation
Metropolitan Development Corporation

By

Published : Jun 11, 2022, 7:55 PM IST

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் போன்று, கோவை, மதுரை, திருப்பூர், ஓசூர் உள்ளிட்ட மாநகராட்சிகளில் பெருநகர வளர்ச்சி குழுமங்கள் அமைப்பதற்கான சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அவற்றின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தவும், கட்டுமானத் திட்ட அனுமதியை விரைவுபடுத்தி பெருநகர வளர்ச்சிக் குழுமம் அமைக்கவும் ஐஏஎஸ் தரத்திலான சிறப்பு அலுவலர்களை கொண்ட பணியிடங்களை உருவாக்கி தமிழ்நாடு அரசு இன்று (ஜூன் 11) உத்தரவிட்டுள்ளது.

கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் போன்று, கோவை, மதுரை, திருப்பூர், ஓசூர் உள்ளிட்ட மாநகராட்சிகளில் பெருநகர வளர்ச்சி குழுமங்கள் அமைக்கப்படுவதற்கா சட்ட மசோதாவை அறிமுகம் செய்தார்.

அதில், வளர்ந்து வரும் நகர்புற பகுதிகளை கருத்தில் கொண்டு, வளர்ச்சி திட்டங்களை தயாரித்தல், மாநகரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் செயற்படுத்துதலுக்காக மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஓசூர் நகராட்சிக்கான நகர்புற வளர்ச்சி குழுமங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும், நகர்புற வளர்ச்சிக் குழுமங்களுக்கு சட்டப்பூர்வமான தகுதி நிலையினை வழங்குதல் உள்ளிட்டவை தேவையானதாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்காக, முழு நேர உறுப்பினர், செயலர்கள் நியமிக்கப்பட்டு ஆணைகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில், இந்த 4 மாநகராட்சிகளுக்கும் ஆரம்ப கட்டத்தில் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் ஆணையப் பகுதியை வரையறுத்தல், பணியாளர்களை நியமித்தல் மற்றும் ஆட்சேர்ப்பு, திட்டங்களை தயாரித்தல் போன்ற பல ஆயத்த நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக ஐஏஎஸ் அந்தஸ்திலான சிறப்பு அதிகாரி பணியிடங்களை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: அதிகரிக்கும் கரோனா... முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு...

ABOUT THE AUTHOR

...view details