2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கை குறித்து நமது ஈடிவி பாரத்திற்கு சிறப்புப் பேட்டியளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், “ இந்த நிதிநிலை அறிக்கையால் சாதாரண மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. வருமான வரிக் குறைப்பு என்பது வருமானத்தை ஈட்டும் வழியாக இருந்தாலும், குறைந்த வருமானத்தை ஈட்டுபவர்களுக்கு பாதிப்பும், அதிக வருமானத்தை ஈட்டுபவர்களுக்கு இது சாதகமானதாகவே உள்ளது.
பொதுத்துறையில் உள்ள அரசின் பங்குகளை, தனியாருக்கு விற்பனை செய்வது என்பது தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக மத்திய அரசு செயல்படுகிறது என்பதையே பிரதிபலிக்கிறது.