தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தா. பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்! - தா. பாண்டியன் உடல்நலம்

சென்னை: அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவரும் கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவர் தா. பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CPI senior leader Tha pandian health condition is critical
CPI senior leader Tha pandian health condition is critical

By

Published : Feb 25, 2021, 10:22 AM IST

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தா. பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில், சென்னை ராஜிவ் காந்தி அரசினர் பொது மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

இது குறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தா. பாண்டியன் கவலைக்கிடமான நிலையில், சென்னை ராஜிவ் காந்தி அரசினர் பொது மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையின் முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் தேரணி ராஜன், மருத்துவர் தினேஷ் உள்ளிட்ட உயர்நிலைச் சிறப்பு மருந்துவர்கள் தா. பாண்டியன் உடல் நிலையைக் கண்காணித்து தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க...நடுத்தெருவில் சண்டை போட்டுக்கொண்ட ஊராட்சி மன்ற பெண் தலைவர்கள்!

ABOUT THE AUTHOR

...view details