இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'தமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
"சங்க இலக்கியம்" குறித்த சிலம்பொலியின் தேடல் அளப்பரியது: இ. கம்யூனிஸ்ட் இரங்கல் - சிலம்பொலி செல்லப்பன்
சென்னை: தமிழ் மீட்டுருவாக்கும் சிந்தனையை வலியுறுத்தியவர் சிலம்பொலி செல்லப்பன் என்று தங்கள் இரங்கல் குறிப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருக்கிறது.
தமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் தமிழ் வளர்ச்சிதுறை இயக்குநராகவும், உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திலும் நீண்டகாலம் பணியாற்றி தமிழ் வளர்ச்சிக்கு பங்காற்றியவர். "சங்க இலக்கியம்" குறித்த அவரது தேடல் குறிப்பிடத்தக்கது. தமிழ்தொண்மையின் கூத்து, பட்டறை, உரைநடை, கவிதை, புதினங்கள், இலக்கியங்கள், காப்பியங்கள் என தமிழ் மீட்டுருவாக்கும் சிந்தனையை வலியுறுத்தியவர்.
அவரது மறைவு தமிழ் ஆராய்ச்சி உலகிற்கு பேரிழப்பாகும். இவரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் அஞ்சலியை தெரிவிப்பதுடன், அவரை இழந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.