தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'தமிழ்நாட்டிற்கு பயன்தரும் எதுவும் பட்ஜெட்டில் இல்லை' - இ.கம்யூ., விமர்சனம்! - பட்ஜெட்

சென்னை: தமிழ் நாட்டிற்கான கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம், கஜா, ஓக்கி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண ஒதுக்கீடு என எதுவும் நிதிநிலை அறிக்கையில் இல்லை என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

cpi

By

Published : Jul 5, 2019, 11:53 PM IST


இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பாஜக இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள முதல் நிதிநிலை அறிக்கை பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையிலோ, விவசாயம் மற்றும் தொழில்துறை உற்பத்தியை வளர்த்தெடுக்கும் வகையிலோ, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலோ அமையவில்லை.

60 வயதுக்கு மேற்பட்ட சிறு, குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும், விவசாயக் கடன் ரத்து செய்வது, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற நாடாளுமன்ற தேர்தல் காலத்து வாக்குறுதிகள் நிறைவேற்றம் குறித்து நிதிநிலை அறிக்கையில் எதுவுமில்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவது குறித்து எவ்வித புதிய அறிவிப்பும் இல்லாதது இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களை சீரழிக்கும் வகையில் காப்பீட்டுத்துறையில 100 சதவிகித அந்நிய முதலீட்டு, விமானத்துறையில் கூடுதல் அந்நிய முதலீட்டு க்கு அனுமதி அளிப்பது, பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை விற்று பற்றாக்குறை நிதிநிலை அறிக்கையை சரிக்கட்டுவது போன்ற தவறான அம்சங்கள் இந்திய பொருளாதாரத்தில் மேலும் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும். பெட்ரோல் - டீசல் மீது சாலை மேம்பாட்டிற்காக கூடுதலாக ரூ.1 வரி விதித்துள்ளது சாதாரண, ஏழை, எளிய, நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும்.

தமிழகத்திற்கான புதிய ரயில்கள் மற்றும் ரயில் வழிப்பாதைகள், கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம், கஜா புயல், ஓக்கி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவி ஒதுக்கீடு ஏதும் அறிவிக்கப்படாததது தமிழகத்தை வஞ்சிப்பதாகும். மொத்தத்தில் பாஜக அரசு, மக்களை ஏமாற்றும் நிதிநிலை அறிக்கை என்பதே நிதர்சனமான உண்மை' என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ABOUT THE AUTHOR

...view details