தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
'கரோனா பேரிடரை ஸ்டாலின் ஒழிப்பார்' - பாலகிருஷ்ணன் - CPI Balakrishnan byte
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டி
இந்நிலையில், இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளரை சந்தித்து பேசினார். அப்போது, "மகத்தான வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி. கரோனா பேரிடர் ஒழிப்புக்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் ஸ்டாலின் உழைப்பார்" என்று தெரிவித்தார்.