சென்னை: மேடவாக்கம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் கேசவன் (80). இவர் மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இன்று (நவ.18) காலை மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பியிருந்தார். அப்போது மேடவாக்கம் பாபு நகர், ரவி பிரதான சாலையில் மின் கம்பியில் அறுந்து விழுந்து கிடந்தன.
இந்த இடத்தை கடந்து செல்ல முயன்ற மூன்று பசுக்கள், இரண்டு கன்றுகள் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. இது குறித்து தகவலறிந்த மேடவாக்கம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்துகிடந்த மாடுகளை ஜேசிபி இயந்திரம் மூலம் தண்ணீரிலிருந்து அப்புறப்படுத்தினர்.
தொடர்ந்து அங்கு வந்த மேடவாக்கம் கால்நடைத்துறை மருத்துவர் மைதிலி இறந்த மாடுகளுக்கு உடற்கூராய்வு செய்தார். இதனையறிந்த சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். அரவிந்த்ரமேஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின்சார வயர் அறுந்து விழுந்த இடத்தை பார்வையிட்டு மாடு உரிமையாளர்க்கு ஆறுதல் கூறினார்.