தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னை வந்தடைந்த 24 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் - Chennai airport

புனேவில் இருந்து மூன்று லட்சத்து 24 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னை வந்தடைந்தன

கோவீஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் சென்னை வந்தது
கோவீஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் சென்னை வந்தது

By

Published : Jun 25, 2021, 4:57 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் நாளுக்குநாள் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவனத் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் மக்களுக்கு போட தடுப்பூசிகள் இல்லாததால் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் தமிழ்நாட்டிற்கு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என மாநில அரசு முன்னதாக வலியுறுத்தியது.

இந்நிலையில் புனேவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 28 பார்சல்களில் சுமார் மூன்று லட்சத்து 12 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னை வந்தடைந்தன.

இதில் தமிழ்நாடு அரசுக்கு 27 பார்சல்களில் மூன்று லட்சத்து 12 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகளை சுகாதாரத் துறை அலுலவர்கள் பெற்றுக்கொண்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநிலத் தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு கொண்டு சென்றனர்.

அதேபோல் மத்தியத் தொகுப்பிலிருந்து ஒரு பார்சலில் வந்த 12 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை பெரியமேட்டில் உள்ள மத்திய மருந்து கிடங்கிற்கு கொண்டுசெல்லப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details