சென்னை : தமிழ்நாடு பார்கவுன்சில் சார்பில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்களுக்கான கரோனா தடுப்பூசி முகாம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.
தமிழ்நாட்டிற்கு வரும் 2 லட்சம் தடுப்பூசிகள் - தமிழ்நாடு பார்கவுன்சில்
12:08 June 28
தமிழ்நாட்டிற்கு சுமார் 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று மாலை வருகின்றன.
இதனை ஆய்வு செய்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அனைவருக்கும் தடுப்பூசி போட தயாராக இருந்தும், தடுப்பூசி கையிருப்பு இல்லை என தெரிவித்தார்.
இந்தநிலையில், தமிழ்நாட்டிற்கு சுமார் 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இனறு மாலை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. தடுப்பூசிகள் வந்ததும் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ‘தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை’ - மா. சுப்பிரமணியன்