திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபாய் மகளிர் மருத்துவமனையில், தேசிய குடற்புழு நீக்க வாரத்தையொட்டி, குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாமினை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,
”ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, ஆகஸ்ட் 10ஆம் நாள்கள் குடற்புழு நீக்க நாளாக கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. இந்தாண்டு கரோனா பாதிப்பு காலம் என்பதால், முகாம் செப்டம்பர் 14 முதல் 28ஆம் தேதி வரை மூன்று சுற்றுகளாக நடத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் அனைத்து ஆரம்ப, துணை சுகாதார நிலையங்களிலும் குடற்புழு நீக்க சிறப்பு முகாம் நடைபெறும். இதில், 1 முதல் 2 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு அரை மாத்திரையும், 2 வயதிற்கு மேல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு 1 மாத்திரையும் வழங்கப்படும். இந்தச் சிறப்பு முகாமில் அங்கன்வாடி, நல்வாழ்வுத் துறை, ஆஷா பணியாளர்கள் மொத்தம் 54,439 பேர் ஈடுபடுத்தப்படுவர்.