சென்னை:தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 835 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை நவம்பர் 9ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தகவலில், 'தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து இரண்டாயிரத்து 72 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் தமிழ்நாட்டில் புதிதாக 835 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டது.
தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 12 லட்சத்து 9 ஆயிரத்து 411 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதனால் 27 லட்சத்து 10 ஆயிரத்து 756 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பிற்கு ஆளாகியிருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. தற்போது 10 ஆயிரத்து 271 பேர் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் குணமடைந்த 924 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 64 ஆயிரத்து 247 என உயர்ந்துள்ளது.
தனியார் மருத்துவமனையில் 4 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 8 நோயாளிகளும் என 12 நோயாளிகள் சிகிச்சைப் பலனின்றி இறந்து உள்ளனர். இதன்மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 238 என உயர்ந்துள்ளது.
சென்னையில் நேற்று (நவ.08) குறைந்திருந்த கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு இன்று (நவ.09) சற்று அதிகரித்து 131 என பதிவாகியுள்ளது.
கோயம்புத்தூரில் 98 பேருக்கும், செங்கல்பட்டில் 70 பேருக்கும், ஈரோட்டில் 63 பேருக்கும், திருப்பூரில் 56 நபர்களுக்கும் என அதிகளவில் நோய்த்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மாவட்டம் வாரியாக மொத்தப் பாதிப்பு நிலவரம்:
சென்னை - 5,55,680
கோயம்புத்தூர் - 2,47,720
செங்கல்பட்டு - 1,72,509
திருவள்ளூர் - 1,19,675
ஈரோடு - 1,04,884