சென்னை:மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (ஜனவரி 31) வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 105 பேருக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் தமிழ்நாட்டில் 19 ஆயிரத்து 276 பேருக்கும், சவுதி அரேபியா, இலங்கையிலிருந்து வந்த இரண்டு பேருக்கும் என 19 ஆயிரத்து 280 பேருக்கும் புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்றுவந்தவர்களில் 25 ஆயிரத்து 56 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.